துளிப்பாக்கள் 20

விசாரணைக்கு உரியவர்கள்
விசாரித்துக் கொண்டிருந்தனர்
கூண்டுக்குள் நிரபராதிகள்.

******
ஒப்பனை உணர்ச்சி
காமம் களிப்பு
திரைக்குப் பின்னால் தேசம்.

******
சிலுவைக்குள் சக்தி
சிவனுக்குள் மேரி
பரமபிதாவே ‌இரட்சியும்.

******
கருவறையைத் திற
கடவுளை விடுதலை செய்
ஆண்டவனுக்கு அருள்.

******
கால்களில் காயம்
கைகளில் மருந்து
நிவாரண நிதி.

******
திருடன்
கண்ணில் பட்டது –
“நன்றி; மீண்டும் வருக”.

2 comments:

Bavan said...

எல்லாம் நல்லா இருக்கு..:)
கடைசிக்கவிதையை மிகவும் ரசித்தேன்..:D

nis (Ravana) said...

நல்லா இருக்கு

Post a Comment