காற்றில் கலந்து
காணாமல் போன
வாயைக் கடந்த
வார்த்தைகள் போலப்
போய்விட்டாய்.....
புயல் கடந்து
போன பின்னும்
பூவில் மணம்
மிச்சமிருப்பதைப் போல்
நினைவில் நிற்கிறாய்.....
நீருக்குள் கல்போல
நெஞ்சுக்குள் மூழ்கிவிட்டாய்.....
கல்லுக்குள் நீர்போலக்
கட்டாயம் இருப்பேனா?
காணாமல் போன
வாயைக் கடந்த
வார்த்தைகள் போலப்
போய்விட்டாய்.....
புயல் கடந்து
போன பின்னும்
பூவில் மணம்
மிச்சமிருப்பதைப் போல்
நினைவில் நிற்கிறாய்.....
நீருக்குள் கல்போல
நெஞ்சுக்குள் மூழ்கிவிட்டாய்.....
கல்லுக்குள் நீர்போலக்
கட்டாயம் இருப்பேனா?
4 comments:
பூவில் மணம் மிச்சமிருப்பதைப் போல - நல்ல உவமை
கவிதை அருமை ! நன்றி !
சுருக்கமாக இருந்தாலும், மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது!! கவிதை அருமை!!
'பூவில் மணம்
மிச்சமிருப்பதைப் போல்
நினைவில் நிற்கிறாய்'
அனைத்தும் முடிந்த பின்னே எஞ்சி இருக்கும் ஆழியா சோகத்தை வலியோடு உணர்த்துகிறது இவ்வரி
Post a Comment