நீள்கவிதை 4

1. எத்தனை எத்தனை
    சித்திரை வந்தன்
    இத்திரை மீதினிலே – அவை
            எத்தனை எத்தனை
            முத்திரை பதித்தன
            மாந்தரின் நெஞ்சினிலே.

2. பித்தரைப் போலிவர்
    பிதற்றித் திரிந்தது
    எத்தனை காலமடா – அவர்
            பித்தம் தெளிந்ததும்
            சித்தம் சிறந்ததும்
            சத்திய வேதமடா.

3. புத்தரை காந்தியைப்
    போற்றிப் புகழ்ந்த நம்
    புனிதம் போனதெங்கே – அவர்
            போதனை யாவையும்
            புதைகுழி போனதும்
            புழுக்கள் ஆனதங்கே.

4. தோல்வியும் துயரும்
    தொடரா திருப்பது
    தோல்வலி உள்ளவரை – அவர்
            புலன்கள் அடங்கிப்
            புந்தி தெளிந்தால்
            புதியன புரியமடா.

5. ஆன்மா அதற்குள்
    அறிவுச் சுடரொளி
    ஆயிரம் எழுந்ததடா – அதன்
        வெளிச்ச விழுதுகள்
        விரிந்து பரந்தொரு
        வித்தகம் ஆனதடா.

6. தெளியா ஞானச்
    செறுக்கில் மானுடம்;
    சிதிலம் ஆனதடா – அவர்
            தெளிந்து தெளிந்து
            தேரிய போது
            தெய்வதம் ஆனதடா

7. தொண்டே தொழிலாய்க்
    தொண்டவர் நெஞ்சம்
    கோவிலுக்கு இணையாகும் - அவர்
            உடல்பொருள் ஆவி
            உணர்வுகள் யாவும்
            உன்னத மானதடா.

2 comments:

யோவ் said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

கவிதாமணி said...

நன்றி யோவ் அவர்களே...
வேளைப்பலு காரணமாக இங்கு பதிவுப் போடவும் தங்களுக்கு உடனே பதில் எழுதவும் முடியவில்லை மன்னித்துவிடுங்கள்.

Post a Comment