கேள்வி – பதில்:

1. சிலுக்கு வீட்டு நாய்க்குட்டி
    டிஸ்கோ வீட்டுப் பூனைக்குட்டி
    ஒப்பிடுக.
              நட்சத்திரக் குறியிட்ட
              இந்தக் கேள்வி
              ரூபாய் 50 பரிசு பெறுகிறது.

2. மன்மோகன் சிங் சிதம்பரம்
    பட்ஜெட்டுகளை ஒப்பிடுக.
              முதலாவது ‘ம்’ வி;ல் ஆரம்பித்து’ங்’ வில் முடிகிறது.
               இரண்டவது சி’ல் ஆரம்பித்து ‘ம்’ல் முடிகிறது.
    இவைதான் இன்றைய பத்திரிக்கைகளின்
    பரபரப்பான பக்கங்கள்.

சூடானாபக்கம்:

போட்டோ போட்டி இருப்பதனால்
சிலர் போட்டேர் போட்டுக்
கடை விரிப்போம்......
சூடாய்ச் செய்திக்
கதை விரிப்போம்…...
புத்திகெட்ட ஜனங்களுக்கு
பொய்யோ.….. மெய்யோ…...
புதுசா இருந்தா போதாதா?

கவர் ஸ்டோரி:

கன்னிமை கழித்த
காவல் துறையின்
கட்டுக் கதைகளை……

கவர்ச்சி அரசியலின்
கனவுக் கன்னிகளின்
காதல் பரிசுகளை……

மதன மாளிகைகளின்
மௌனப் புலம்பல்களை…...

அடக்கு முறைகளின்
அரிதாரப் பூச்சுகளை……

அடையாளம் காட்டியதற்காக

சந்தனக் கட்டைகள் போல்
நாங்கள் சாம்ளாகியிருக்கிறோம்.
அப்போதும்
எங்கள் மனம் - சந்தனம்தான்.

நடுப்பக்கம்:

நடுங்கும் குளிரில்
நனைந்த உடையில்
நம்மைக் கவர்ந்த
நாயகி ஒருத்தி!
சே!
இந்தப் பத்திரிக்கை
ரொம்ப மோசம்……
நடுப்பக்கம்
நாலு இருந்தால் என்ன?

புதுக்கவிதை 6

இந்தியா:
    உலகப்படத்தின்
    வறுமைக்கோடு

தேர்தல்:
    ஜனநாயகத்தின்
    சாபக்கேடு

வேட்பாளன்:
    வெளிநாட்டு
    வங்கியில்
    பணம் போட
    விண்ணப்பிக்கிறவன்

வாக்காளன்:
    கையெழுத்து
    வேட்டையில்
    கைநாட்டு
    வைப்பவன்

வாக்குச்சீட்டு:

    செத்தவன் கையில்
    வெற்றிலை பாக்கு
    பலரை ஏமாற்றிய
    பரிசுச் சீட்டு

பத்திரிக்கை:
    வித்தியாசமான
    அரசியல்வாதி

அரசியல்வாதி:
    பிழைக்கத் தெரிந்த
    பிணம்

புதுக்கவிதை 5

குழந்தை:
    இரு
    மையப் புள்ளிகள் கொண்ட
    ஒரு
    வட்டம்.

சந்தேகம்:
    இதுவோ
    தற்கொலை
    சாவதோ
    மற்றவர்கள்

நிவாரணநிதி:

    கால்களின்
    காயத்திற்குக்
    கைகளில்
    மருந்து

தற்பெருமை:
    கவிதை
    வியாபாரிகளின்
    விசிட்டிங் கார்டு

பொய்:
    கண்டுபிடிக்கப் படாத
    கவிதை

மனிதன்:
    ரொபாடுகளின்
    மருத்துவ
    ஆராய்ச்சிக்குப்
    பயன்படும்
    அஃறிணை

வாழ்க்கை:
    தமிழல்
    ஒரு
    வார்த்தை

                    சிறப்பு ‘ழ’ கரம் இதன் சிறப்பு

புதுக்கவிதை 4

கணக்கும் பிணக்கும் எதனால் என்ற
    காரணம் நமக்குத் தெரியாமல்
        கயமைத்தனங்கள் ஒழிவதில்லை

பணத்தின் மேலே பணத்தைப் போட்டுப்
    பாது காத்தும் பயனில்லை;
       பாடையில் பேதம் ஏதுமில்லை

பிணத்தின் மேலே பிணத்தைப் போட்டுப்
    புதைத்துப் பார்த்தும் முடியவில்லை.
        பூமியில் சவக்குழி மீதமில்லை

குணத்தில் உயர்ந்த குவலய மாந்தர்
    குழியில் இருந்தும் உயிர்த் தெழுவார்
        கோபுரம் போலே நிமிர்ந்திடுவார்
        (வேறு)

தனக்கத் தனக்கெனும் தன்னுணர்வு
    தகர்ந்தால் தேசம் நன்மை பெறும்
        எனக்கும் உனக்கும் பகைமூட்டம்
            எல்லாம் இந்தச் சுயநலமே

மனமே எதற்கும் ஆதாரம்
    மாண்புகள் தங்கும் கூடாரம்
        மனமே கனவுகள் நனவாக
            மானிடப் பண்பினை வளர்த்துவிடு.

கனக்கும் இதயச் சுமைகளுமே
    கண்ணீர் விட்டால் கரைந்திடுமோ?
        உனக்கென உருகும் இதயங்கள்
            உறுதுணை யானால் இடர்வருமா?

அன்பால் உலகை வசப்படுத்து
    அதனால் உன்னை வளப்படுத்து
        உன்னால் உலகம் வளமானால்
            உயிரின் பயனே அதுதானே!

நீள்கவிதை 3

ஒவ்வொரு அசைவிலும்
ஒருசில பூக்கள்
உதிர்வது எதனாலே?
       உயிரில் கலந்த
       மணத்தைப் பிரிந்த
       வாட்டம் அதனாலே!

நாரே நீயும்
தலையில் இருந்து
நடிப்பது எதனாலே?
       நறுமலர் தன்னை
       நயமுடன் கோர்த்த
       நளினம் அதனாலே!

பிரிவது அறியாப்
பெண்ணே உனக்குப்
பிரியம் எதனாலே?
       அழகும் மணமும்
       அருகருகிருக்கும்
       அற்புதம் அதனாலே!

சிதறிக் கிடக்கும்
பூக்கள் மெல்லச்
சிரிப்பது எதனாலே?
       சிகையெனும் சிறையில்
       சிக்கிக் கிடந்த
       சிறமம் அதனாலே!

விடுதலை என்பது
கெடுதலை ஆகிற
விசமம் எதனாலே?
       விழுவதை மிதிக்கும்
       பெண்ணே உந்தன்
       கால்கள் அதனாலே!

விழுகிற பூவில்
விதையிலை என்றால்
விழுவது வீணாகும்

தொழுகிற தெய்வம்
துணையிலை என்றால்
தொழுவது வீணாகும்

அழுகிற குழந்தை
அடிக்கிற தாயை
அன்புடன் நோக்காது

உழுகிற போது
விழுகிற வியர்வை
பூமியில் தூங்காது

உழைக்கிற போது
உதிரும் வியர்வை
உறக்கம் கொள்ளாது

எழுகிற எண்ணம்
எழுந்து விட்டால்
எழுவது என்பது எளிதாகும்

கழுமரம் கூடப்
பூக்களை உதிர்க்கும்
கவிஞன் எனக்காக.

நீள்கவிதை 2

காயழகிக் கனியான கயமையினைக் காசினியில்
    கண்ணெதிர் காண்கின்றோம் தென்னிலங்கைச் சீமையிலே!
நீயழது நானழது ஊரழுது பாரழுது
    நெஞ்சுடைய எல்லோரும் சேர்ந்தழுது சோர்ந்தோமே
சேயழது தாயழது கற்பிழந்து செத்தபின்னும்
    சேயிழையார் ஊனிழந்து மீண்டுந்தான் செத்தனரே
வாயழுது அகமகிழும் ஜெயவர்த்தன முதலைக்கு
    வஞ்சமில்லா நெஞ்சமது இருப்பதுவும் எங்கேதான்?

கொன்று குவித்தனர் வெந்து தனிந்திடக்
    கொள்ளை யடித்தனர்; தொல்லை கொடுத்தனர்
கன்று பிரித்தனர்; கட்டி வதைத்தனர்
    கற்பு பறித்தனர்; காலில் உதைத்தனர்
நின்று எரித்தனர்; நெஞ்சு துடித்திட
    நஞ்சு கொடுத்தனர்; நாட்டை அழித்தனர்
குன்று பொடித்திடச் சிற்றுளி யாகிய
    கொடியர்க் இதயமும் எங்கே இருக்கிறது?

வாழ்ந்தவர்க்குத் தன்னாட்டில் வாழுதற்கு வழியில்லை
    என்றவெறி வகுப்புவாதப் போர்தொடுத்துச் சீரழிக்கச்
சூழ்ந்தவர்க்குத் துணைநின்று தூண்டிவிடும் பேடியரைத்
    தோழுரித்துப் போடுதற்குத் தாவிடட்டும் போர்ப்புலிகள்
போழ்ந்தவர்க்கு உடலிருக்கம் உதிரத்தை உரிஞ்சிவிட்டுப்
    போதிக்கும் போதுணர்வார் பொல்லாதார் உயிர்த்துடிப்பை;
தாழ்ந்தவர்க்குத் தருமத்தின் தீர்பதனைச் சொல்லாத
    தருதலைக்கு இதயமுமே கல்லாக இருக்கிறதோ?

இன்னாவே செய்தவர்க்கு நன்னயங்கள் செய்தாலோ
    இளித்தவாயர் ஆக்கிடுவார் சிங்களத்துச் சிறுநரிகள்;
முன்னாலே செய்தவினை பின்னாலே வருமென்ற
    முறையான பாடத்தை மூடர்களுக் கடித்துரைத்துச்
சொன்னாலே அடங்கிடுவார்; சோர்வில்லா இளைஞர்களே
    துப்பாக்கி தூக்கிடுங்கள்; துன்பமெல்லாம் போக்கிடுங்கள்;
தன்மானத் தமிழ்மக்கள் அழுகின்ற கண்ணீரே
    வேலாக வேண்டாம்; வெடிகுண்டாக வேண்டுகிறேன்.

மூண்டெழுந்த பகைநெருப்பால் முத்தமிழர் தொகையழித்து
    மூத்தபல பெரியரையும் முத்துநகைச் சிறியரையும்
மாண்டழியச் செய்துவிட்டு மங்கையரின் மானத்தை
    மங்காத செல்வத்தைச் சீரழிந்த சிங்களவர்
பூண்டோடு அழிவதற்குப் புலிப்படைகள் திறளட்டும்
    போர்ப்பறைகள் அதிரட்டும்; பொற்காலம் புலரட்டும்
வேண்டுகின்ற தமிழீலம் விரைவாக மலரட்டும்
    மேதினியில் மேன்மையுடன் நம்தமிழர் வாழட்டும்……