வெறுப்பு

               என்னைப் பெருவதற்காய்
               அவர்கள் கூடவில்லை;
               அவர்கள் கூடியதால்
               நான் பிறந்தேன்.
 
அத்தனை திமிரும்
அடங்கி விட்டது;

காசு பணம்
கரைந்து விட்டது;

இரத்தம் சுண்டிச்
சுருங்கி விட்டது;

ஏதேதோ நோய்....
ஏதேதோ மருந்து....

எல்லாமுமாய்ச் சேர்ந்து
எண்ணிக் கொண்டிருக்கிரார்
நாட்களை;

செத்தால்....
செய்தி
சொல்ல வேண்டாம்.
            என்
            பிறப்புக்கு மட்டுமே
            விதை போட்ட
             ஒருவனை....
எப்படிச் சொல்வேன்
அப்பனென்று? 

3 comments:

கோவி said...

ஆழமிக்க வரிகள்.. அருமை..

கவிதாமணி said...

நன்றி நண்பரே...
வருகை தொடரட்டும்...

Ramya Theivam said...

' என்னைப் பெருவதற்காய்
அவர்கள் கூடவில்லை;
அவர்கள் கூடியதால்
நான் பிறந்தேன்.'

ஏற்றுக்கொள்ள இயலாத உண்மை. மிக அருமை.

Post a Comment