நீள்கவிதை 2

காயழகிக் கனியான கயமையினைக் காசினியில்
    கண்ணெதிர் காண்கின்றோம் தென்னிலங்கைச் சீமையிலே!
நீயழது நானழது ஊரழுது பாரழுது
    நெஞ்சுடைய எல்லோரும் சேர்ந்தழுது சோர்ந்தோமே
சேயழது தாயழது கற்பிழந்து செத்தபின்னும்
    சேயிழையார் ஊனிழந்து மீண்டுந்தான் செத்தனரே
வாயழுது அகமகிழும் ஜெயவர்த்தன முதலைக்கு
    வஞ்சமில்லா நெஞ்சமது இருப்பதுவும் எங்கேதான்?

கொன்று குவித்தனர் வெந்து தனிந்திடக்
    கொள்ளை யடித்தனர்; தொல்லை கொடுத்தனர்
கன்று பிரித்தனர்; கட்டி வதைத்தனர்
    கற்பு பறித்தனர்; காலில் உதைத்தனர்
நின்று எரித்தனர்; நெஞ்சு துடித்திட
    நஞ்சு கொடுத்தனர்; நாட்டை அழித்தனர்
குன்று பொடித்திடச் சிற்றுளி யாகிய
    கொடியர்க் இதயமும் எங்கே இருக்கிறது?

வாழ்ந்தவர்க்குத் தன்னாட்டில் வாழுதற்கு வழியில்லை
    என்றவெறி வகுப்புவாதப் போர்தொடுத்துச் சீரழிக்கச்
சூழ்ந்தவர்க்குத் துணைநின்று தூண்டிவிடும் பேடியரைத்
    தோழுரித்துப் போடுதற்குத் தாவிடட்டும் போர்ப்புலிகள்
போழ்ந்தவர்க்கு உடலிருக்கம் உதிரத்தை உரிஞ்சிவிட்டுப்
    போதிக்கும் போதுணர்வார் பொல்லாதார் உயிர்த்துடிப்பை;
தாழ்ந்தவர்க்குத் தருமத்தின் தீர்பதனைச் சொல்லாத
    தருதலைக்கு இதயமுமே கல்லாக இருக்கிறதோ?

இன்னாவே செய்தவர்க்கு நன்னயங்கள் செய்தாலோ
    இளித்தவாயர் ஆக்கிடுவார் சிங்களத்துச் சிறுநரிகள்;
முன்னாலே செய்தவினை பின்னாலே வருமென்ற
    முறையான பாடத்தை மூடர்களுக் கடித்துரைத்துச்
சொன்னாலே அடங்கிடுவார்; சோர்வில்லா இளைஞர்களே
    துப்பாக்கி தூக்கிடுங்கள்; துன்பமெல்லாம் போக்கிடுங்கள்;
தன்மானத் தமிழ்மக்கள் அழுகின்ற கண்ணீரே
    வேலாக வேண்டாம்; வெடிகுண்டாக வேண்டுகிறேன்.

மூண்டெழுந்த பகைநெருப்பால் முத்தமிழர் தொகையழித்து
    மூத்தபல பெரியரையும் முத்துநகைச் சிறியரையும்
மாண்டழியச் செய்துவிட்டு மங்கையரின் மானத்தை
    மங்காத செல்வத்தைச் சீரழிந்த சிங்களவர்
பூண்டோடு அழிவதற்குப் புலிப்படைகள் திறளட்டும்
    போர்ப்பறைகள் அதிரட்டும்; பொற்காலம் புலரட்டும்
வேண்டுகின்ற தமிழீலம் விரைவாக மலரட்டும்
    மேதினியில் மேன்மையுடன் நம்தமிழர் வாழட்டும்……

0 comments:

Post a Comment