புதுக்கவிதை 5

குழந்தை:
    இரு
    மையப் புள்ளிகள் கொண்ட
    ஒரு
    வட்டம்.

சந்தேகம்:
    இதுவோ
    தற்கொலை
    சாவதோ
    மற்றவர்கள்

நிவாரணநிதி:

    கால்களின்
    காயத்திற்குக்
    கைகளில்
    மருந்து

தற்பெருமை:
    கவிதை
    வியாபாரிகளின்
    விசிட்டிங் கார்டு

பொய்:
    கண்டுபிடிக்கப் படாத
    கவிதை

மனிதன்:
    ரொபாடுகளின்
    மருத்துவ
    ஆராய்ச்சிக்குப்
    பயன்படும்
    அஃறிணை

வாழ்க்கை:
    தமிழல்
    ஒரு
    வார்த்தை

                    சிறப்பு ‘ழ’ கரம் இதன் சிறப்பு

3 comments:

வெறும்பய said...

எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு,.. பொய்யின் விளக்கம் பிரமாதம்..

Ramya Theivam said...

'இதுவோ
தற்கொலை
சாவதோ
மற்றவர்கள்'

இதை உணர்ந்தால் வாழ்கையில் பல இன்னல்களை தவிர்த்துவிடலாம். அர்த்தமுள்ள வரி

ARASAPPAN AZHAGUPANDI A said...

கவிதை
வியாபாரிகளின்
விசிட்டிங் கார்டு
kavitha viyaparikalin mugavari seettu.......

Post a Comment