புதுக்கவிதை 6

இந்தியா:
    உலகப்படத்தின்
    வறுமைக்கோடு

தேர்தல்:
    ஜனநாயகத்தின்
    சாபக்கேடு

வேட்பாளன்:
    வெளிநாட்டு
    வங்கியில்
    பணம் போட
    விண்ணப்பிக்கிறவன்

வாக்காளன்:
    கையெழுத்து
    வேட்டையில்
    கைநாட்டு
    வைப்பவன்

வாக்குச்சீட்டு:

    செத்தவன் கையில்
    வெற்றிலை பாக்கு
    பலரை ஏமாற்றிய
    பரிசுச் சீட்டு

பத்திரிக்கை:
    வித்தியாசமான
    அரசியல்வாதி

அரசியல்வாதி:
    பிழைக்கத் தெரிந்த
    பிணம்

2 comments:

வெறும்பய said...

சரியா சொல்லியிருக்கீங்க ஒவ்வொன்னும் நச்சுன்னு இருக்கு..

Ramya Theivam said...

'உலகப்படத்தின்
வறுமைக்கோடு'
அருமையான வெளிப்பாடு

Post a Comment