துளிப்பாக்கள்

விகாரமாய் இருக்கிறது 
புத்த விகாரம்
சிங்கள நரிகள் சிரிக்கின்றன

******

இந்தியா இரை போட்டது...
ராஜபட்சி எச்சமிட்டது
அசோகச் சக்கரத்தில்.

******

புள்ளிமான் வயிற்றில்
புலியாய்ப் பிறந்தது
பிரபாகரன் மட்டும்தான்

******

பரலோகத்தைக் காப்பாற்ற
பாலசிங்கம் அழைத்தாரா?
திரும்பிவா  தீர்க்கதரிசியே

******

எப்போது முடியும்?
புலிகளுக்கு மணிக்கட்டிய
எலிகளின் காலம்

******

கண்ணீர் வடிக்காதே
கவிதை படிக்காதே
களத்தில் இறங்கிப் போராடு

0 comments:

Post a Comment