பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு

கொலை
கொள்ளை
லஞ்சம்
உழல்
மார்க்கமாகச் செல்லும்
அரசியல்வாதி எக்ஸ்பிரஸ்……
இப்போது –
தேர்தல் ஜங்சனில்
வாக்குச் சீட்டுப் பிளாட்பாரத்திலிருந்து
புறப்படும்;
இது –
நீதி
நேர்மை
நியாயம்
தொண்டு
தூய்மை
ஆகிய நிலையங்களில்
நிற்காது.

1 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

சிந்தனை அருமை
நல்ல இருக்கு சிறப்பாக . பகிர்வுக்கு நன்றி

Post a Comment