பாவங்கள்

60 பேரை
ஏற்றிக் கொண்டு
ஆட்டோ ஒன்று விரைகிறது;

20 பேரைத்
திணித்துக் கொண்டு
ரிக்ஸா ஒன்று நெளிகிறது;

முன்னே இருவர்
பின்னே மூவர்
ஒற்றைச் சக்கர வாகனத்தில் தான்
இந்த விசித்திரம் நடக்கிறது;

எல்லாம்.....
எல்லாம்.....

பள்ளிக்குப் போகிற
பாவங்கள்.


3 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கவிதை நல்லா இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி

கவிதாமணி said...

மிக்க நன்றி நன்பரே...
உங்கள் கருத்தை ஏற்று மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விட்டேன் தொடர்ந்து உதவுங்கள்.

Post a Comment