குறைப்பு

ஓட்டுக்கு இருநூறாய்
வீட்டுக்குள் எறிந்த
நானூறில்
நாய்குட்டி வாங்கி
நன்றாய் வளர்த்தான் பிள்ளை.
இடைத்தேர்தல் வந்தது
கொடை வள்ளல்கள் வந்தார்கள்
குறைத்துக் கெடுத்தது
கூறுகெட்ட நாய்……
தனக்கொரு
இணைகிடைப்பதை.

4 comments:

மதுரை சரவணன் said...

இடைத்தேர்தல் வந்தது
கொடை வள்ளல்கள் வந்தார்கள்
குறைத்துக் கெடுத்தது
கூறுகெட்ட நாய்……
தனக்கொரு
இணைகிடைப்பதை.//

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

rk guru said...

கவிதை அருமை ........வாழ்த்துகள்

Nagarajan- Aswatha Rao- purushothama Rao said...

பிறப்பில் நாயானாலும் தன் இயல்பு மாறததை இன்றைய மனிதர்களுக்கு உவமித்து எழுதியது அருமை.நல்ல மாட்டிற்க்கு ஒரு சூடு மனிதனுக்கு???
நாகராஜன் பாப்பாரப்பட்டி

கவிதாமணி said...

உங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே...
தொடர்ந்து வாருங்கள்.

Post a Comment