அரிப்பு

அடமக்கு
எத்தன தடவ சொன்னாலும்
மரமண்டையில ஏறாதா?
நீயெல்லாம் படிச்சு……
என்னத்தக் கிழிக்கப் போற……
பேசாம –
மாடுமேய்க்கப் போடா;
மேய்ச்சுட்டாலும்
கழுத உருப்பட்ட மாதிரிதான்.
            ஆறாம் வகுப்பில்
            யை
            வாய் எழுதி
            ஐயாவிடம் வாங்கிய
            அர்ச்சனையின் அலைவரிசை……
அப்படி இப்படி அடித்து
எப்படியோ படித்து
அவரை இவரைப் பிடித்து
அய்யா ஆயிட்டேன்
கல்லூரில்.
             என் ஆறாவது புத்தகத்தின்
             பின் அட்டையில்
             அச்சாகியிருந்தது –
வெளிட்ட புத்தகங்கள்
ந்து.

1 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அருமை வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி !

Post a Comment