நவீனம்

அது
இது
சாம்பல்
சருகு
மின்மினி
மேகத்திரை
பதுங்கு குழி
பாடை
வெள்ளை இருட்டு
வெளிச்ச இரவு
இன்னும் சில வார்த்தைகள்……
கோழி கிளறுவது போல்
களைத்துப் போட்டு
எழுதிப்பார்……
                நவீன க(வி)தை பிறக்கும்.
                ‘வி’யை எடு
                ‘ழு’வை இடு
பின் நவீனத்துவமா?
முன் நவீனத்துவமா?
                அறிவு ஜீவிகள்
                அர்த்தம் கண்டு
                அறிவிப்பார்கள்;
                சாகித்தியங்கள்
                சாத்தியப்படும்;
‘அது’வை
அதிகப்படுத்து;
அது
அழகாய் இருக்கும்.

0 comments:

Post a Comment