நவீனம் 2

மூக்கைச் சுற்றி
மூளையைக் கசக்கி
முடிந்த போது
முடியாமல்
முடிந்தது
தொடக்கம்……
             சூனியத்தின்
             நீட்ச்சியாகவும்,
             இருத்தலில்
             சாட்சியாகவும்,
             முறைத்துக் கொண்டிருந்தது
              அடுத்த புத்தகத்தின்
              முதல் பக்கத்தில்.
முதலில் – முன் நவீனத்துவம்
முடிவில் – பின் நவீனத்துவம்
               அது
              முடிவான
              முதல்.
அப்படியானால்
அது (எது?)
எப்படியானால்
என்ன?

2 comments:

முள் said...

அருமை. அரை வேக்காடுகளுக்கு நல்ல சவுக்கடி.

கவிதாமணி said...

நன்றி நண்பரே...
தொடர்ந்து எழுதுங்கள்.

Post a Comment