அந்தஸ்து

அண்ணே……!
நாங்கெல்லாம்
உங்க அளவு இல்ல……
ஏதோ
எங்களுக்குத் தெரிஞ்சத
எழுதுகிறோம்.
             வார ஞாயித்துக் கிழம
             காலைல 11 மணிக்கு
             கலைஞர் டிவில
             கவியரங்கம்;
             நான் தான் தலைமை;
             கட்டாயம் பாருங்க.
யாருடா அது……?
             அவங்கெடக்குறான்
             வெட்டிப்பய……
             பெரிய இவன்னு நெனப்பு
              எல்லாத்தையிம்
              குத்தஞ்சொல்லிக்கிட்டு
யாருடா அது……?
               ஸ்கூல்ல படிக்கிறப்ப
               லீவ்போஸ்ட் வாத்தியார்டா.

0 comments:

Post a Comment