துளிப்பாக்கள் 19

உள்ளே ஒன்று
வெளியே ஒன்று
வாழ்த்தியது வாய்.

******
ஏதேதோ சொன்னான்
பாசாங்கு செய்தான்
எதிர் முனையில் எவரோ!

******
புன்னகையும் கண்ணீரும்
ஆயுதங்கள் ஆயின
காயப்பட்டதோ காதல்.

******
அபாய அறிவிப்பு
எச்சரிக்கையாய் இருங்கள்;
தேர்தல் வருகிறது.

******
கோடம்பாக்கத்தில் தொடக்கம்
கோட்டையில் முடிவு
சினிமாக் கனவு.

******
பழைய பாயைப்
பாதியாய்க் கிழித்தனர்
பாகப்பிரிவினை.

2 comments:

மதுரை சரவணன் said...

உள்ளும் வெளியும் ஒரே மாதிரி வாழ்த்துகிறத் உங்கள் கவிதையைப் படித்து என் வாய்... அருமை. கவி வாழ்த்துக்கள்

velji said...

அத்தனை துளிகளும் அருமை!

Post a Comment