சினிமா

கூழுக்கு வழியில்ல
குருபார்வ சரியில்ல
பாலுக்குப் பிள்ளையழ
படத்துக்குப் போவாக.
              சினிமாக் கொட்டகையில்
              சிலுக்கு ஆடுறத
              துணியே இல்லாம
              சுமீதா குளிக்கிறத
              ஏழாம்தரம் பார்க்க
              எடமே கெடைக்காம
              தவியாத் தவிக்கிறது
              தாத்தா மனசுங்க.

ஏசு படத்துக்கும்
“ஏ” முத்திரை
இருந்தாத் தான்
எங்க ஊர்ப் பாதிரியார்
எட்டிப் பாப்பாரு.
              ருக்குமணி ருக்குமணி
              அக்கம்பக்கம் என்ன சத்தம்?
              சின்ன சின்ன ஆசைகளைச்
              சீரழித்தது இந்தச் சத்தம்.

வெக்கம் கெட்டவங்க
வெத்துடம்பப் பாத்துருகிச்
சொக்கிக் கிடந்தவங்க
சொப்பனம் கண்டாக.
            மணி ரத்தினம்
            வைரம் முத்தென்று
            கொட்டிக் கொடுத்தோமே……
            ராமா! நாராயணா!

அடுத்த தலமுறைக்கு
ஆபத்து இல்லாம
எடுக்கும் படமெல்லாம்
இனியிருக்க வேணுமப்பா.

("ரோஜா" - படம் பார்த்ததும் எழுதியது)

1 comments:

மதுரை சரவணன் said...

//ருக்குமணி ருக்குமணி
அக்கம்பக்கம் என்ன சத்தம்?
சின்ன சின்ன ஆசைகளைச்
சீரழித்தது இந்தச் சத்தம்.//

கருத்துள்ளக் கவிதை. வாழ்த்துக்கள்

Post a Comment