துளிப்பாக்கள் 7

அம்மா ஆடு இலை
அலுத்துக் கொண்டது பிள்ளை
சேனலை மாற்ற முடியாதா?

****** 
பளபளக்கும் பங்களா
பளிங்குக் கழிவறை
வேறு என்ன செய்வது?

****** 
பெண்னைப் பிடித்தது
பட்சணம் பிடித்தது
சீர்வரிசை பிடித்தது. (பிடிக்கவில்லை)

****** 
செக்கு மாடுகளை
ஜோடி சேர்த்தனர்
இழுத்தன இடவலமாய்.

****** 
சந்தோச வாசனை
மறைத்துக் கொண்டது
திருமணப் பந்தல்.

****** 
மருமகன் வந்து
மாமனாருக்குத் தந்தான்
மரணப் பரிசு.

1 comments:

மதுரை சரவணன் said...

//மருமகன் வந்து
மாமனாருக்குத் தந்தான்
மரணப் பரிசு.//
அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள்

Post a Comment