அலுத்துக் கொண்டது பிள்ளை
சேனலை மாற்ற முடியாதா?
******
பளபளக்கும் பங்களாபளிங்குக் கழிவறை
வேறு என்ன செய்வது?
******
பெண்னைப் பிடித்ததுபட்சணம் பிடித்தது
சீர்வரிசை பிடித்தது. (பிடிக்கவில்லை)
******
செக்கு மாடுகளைஜோடி சேர்த்தனர்
இழுத்தன இடவலமாய்.
******
சந்தோச வாசனைமறைத்துக் கொண்டது
திருமணப் பந்தல்.
******
மருமகன் வந்துமாமனாருக்குத் தந்தான்
மரணப் பரிசு.
1 comments:
//மருமகன் வந்து
மாமனாருக்குத் தந்தான்
மரணப் பரிசு.//
அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள்
Post a Comment