துளிப்பாக்கள் 15

கண்ணாடி காதுக்கருவி
கட்டாயம் வேண்டும்……
குருடாய்ச் செவிடாய்ச் சாமிசிலைகள்.


******
சிறப்பு மருத்துவர்கள்
சீக்கிரம் வரட்டும்
சவக்கிடங்குகளில் சாமிசிலைகள்.


******
காசு காசு
எல்லாத்துக்கும் காசு
இலவச மருத்துவ மனை.


******
வயிறு எரிந்தது
வாழ்க்கை எரிந்தது
காடு எரிந்தது.


******
சுற்று வீடுகளில்
தொலைக்காட்சித் தொடர்கள்……
இடையில் ஒரு இழவுவீடு.


******
நாளை தேர்வு
நானா எழுதுகிறேன்
அலறும் தொலைக்காட்சி.

3 comments:

வெறும்பய said...

சுற்று வீடுகளில்
தொலைக்காட்சித் தொடர்கள்……
இடையில் ஒரு இழவுவீடு.

//

உண்மை தான் .. ஒரு வேளை தான் வீட்டில் ஏதாவது நடந்தால் கூட அவர்கள் இந்த சீரியல் முடியட்டும் பின்பு பார்ப்போம் என்று தான் யோசிக்கிறார்கள்...

மதுரை சரவணன் said...

கடைசி கவிதை நச். வாழ்த்துக்கள்

Anonymous said...

arputham kavithamani avagalae.

Post a Comment