துளிப்பாக்கள் 13

போடுறாங்க நோட்டு;
போடுறாங்க ஓட்டு;
போடுறாங்க வேட்டு.

****** 
மழையா குடம் தருகிறோம்
வேயிலா குடை தருகிறோம்
நாங்களே ஆட்சி செய்கிறோம்.

****** 
காவல் நிலையம் வேண்டாம்;
நீதி மன்றம் வேண்டாம்;
நாங்கள் திருத்தி விட்டோம்.

****** 
ஈழத் தமிழா ஏமாறாதே!
தெற்கே சூரியன் உதிக்காது
வடக்கோ கையைக் கொடுக்காது.

****** 
கூவம் நதியே உனக்கொன்று……
பெப்சி கோலா உனக்கொன்று……
இந்தா பிடி – “கலைமாமணி”

****** 
அடுத்த தேர்தலில்
நாங்களே வெல்வோம்
“ஆஸ்கார் விருது” அள்ளித் தருவோம்.

2 comments:

ஜிஎஸ்ஆர் said...

நீங்கள் இங்குhttp://suthanthira-ilavasa-menporul.blogspot.com/

பொன்விழி மென்பொருள் http://www.esnips.com/doc/6434289e-f977-4b51-86c0-0de736a98d0e/PonVizhi-TamilOCR

கவிதாமணி said...

நண்பருக்கு வணக்கம்...
தங்கள் உதவிக்கு மிக்க நன்றி.

Post a Comment