துளிப்பாக்கள் 16

தீபம் எரிந்தது
திசைகள் மறைந்தன
திகைப்பாய் இருந்தது.

******
விரிந்த வானம்
தெரிந்த வாழ்க்கை
சின்னச் சின்னத் தேடல்கள்.

******
தூண்டிலை விடு
வலையை எடு
மொத்தமாய்ப் பிடி.

******
பூவா தலையா
போட்டால் தெரியும்
ஐ.நா. சபையின் தீர்மானம்.

******
வாய் வசைபாடியது
கை எழுதியது
ஸ்ரீ ராம ஜெயம்.

******
வீடு மாறினேன்
மாடி ஏறினேன்
கூடு மாறுமா குருவி / குயில்.

1 comments:

Balaji saravana said...

//விரிந்த வானம்
தெரிந்த வாழ்க்கை
சின்னச் சின்னத் தேடல்கள்.//

//வாய் வசைபாடியது
கை எழுதியது
ஸ்ரீ ராம ஜெயம்.//

நல்ல ஹைக்கூ...
ரசித்தேன்!

Post a Comment