துளிப்பாக்கள் 17

தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
டாஸ்மாக் விளம்பரம்.

******
“நேரகாலம் சரியில்லை”
எப்படி இருக்கும்?
இப்படி இருந்தால்.

******
மூச்சைப் பிடி
மூளையைக் கசக்கு
முயன்று உழை.

******
முடவன் எடுத்தான் கொம்புத்தேன்
முட்டாள் இழுத்தான் முதுகில்த்தேர்
முயற்சியை முறைப்படுத்து

******
அழவும் இல்லை
சிரிக்கவும் இல்லை
ஆண்டவனிடத்தில் அசைவேயில்லை.

******
தொழுதான் துடித்தான்
உண்டியல் நிறைத்தான்
கல்லாய் இருந்தான் கடவுள்.

3 comments:

வெறும்பய said...

Nice

ராஜ ராஜ ராஜன் said...

"அழவும் இல்லை
சிரிக்கவும் இல்லை
ஆண்டவனிடத்தில் அசைவேயில்லை..."

அட டா.. அட டா...
அருமை... அருமை...
துளி எல்லாம் 'தூள்'...!


http://communicatorindia.blogspot.com/

சி. கருணாகரசு said...

தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
டாஸ்மாக் விளம்பரம்.//
நச்!
பாராட்டுக்கள்.

Post a Comment